/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு ஓரங்களில் மண் குவியலால் விபத்து
/
ரோடு ஓரங்களில் மண் குவியலால் விபத்து
ADDED : ஜூலை 14, 2025 02:36 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகர் சர்வீஸ் ரோட்டில் இருபுறமும் மண் குவிந்து கிடப்பதால்டூவீலர்களில் செல்பவர்கள் ஓரங்களில் செல்லும்போது டயர் சிக்கி விழுந்து விபத்து ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டை வழியாக மதுரை -- துாத்துக்குடி நான்கு வழிச்சாலை செல்கிறது. காந்தி நகர் செல்லும் வழியில் மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ்ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு வழியாக புறநகர் பகுதி மக்கள் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக வந்து செல்லும்.
காற்று, மழையால் ரோடு ஓரங்களில் மண் தேங்குகிறது. இதுபோன்ற மண் சேரும் போது அவ்வப்போது அவற்றை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலை துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோட்டில் மண்ணை அள்ளுவதில் மெத்தனமாக உள்ளனர்.
ரோட்டில் வேகமாக வரும் வாகனங்களுக்கு வழி விட டூவீலர்களில் செல்பவர்கள் ஓரத்தில் ஒதுங்கும்போது, மண்ணில்டயர் சிக்கி விழுந்து விபத்து ஏற்படுகிறது. நகரில் முக்கியமான ரோடுகளில் இது போன்று மண் குவியல்கள் உள்ளன. இவற்றை அகற்ற நெடுஞ்சாலை துறை முனைப்பு காட்ட வேண்டும்.