/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் லாரியை நிறுத்துவதால் அதிகரிக்கும் விபத்து
/
காரியாபட்டி கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் லாரியை நிறுத்துவதால் அதிகரிக்கும் விபத்து
காரியாபட்டி கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் லாரியை நிறுத்துவதால் அதிகரிக்கும் விபத்து
காரியாபட்டி கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் லாரியை நிறுத்துவதால் அதிகரிக்கும் விபத்து
ADDED : செப் 27, 2024 04:33 AM

காரியாபட்டி: காரியாபட்டி கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் தூத்துக்குடி செல்லும் கண்டெய்னர் லாரிகளை வளைவான இடத்தில் நிறுத்துவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. விபத்தை தடுக்க மாற்று இடத்தில் நிறுத்த போலீசார் அறிவுறுத்த வேண்டும்.
காரியாபட்டிலிருந்து மதுரை வழியாக செல்லும் வாகனங்கள், கள்ளிக்குடி குராயூர், மருதங்குடி, இலுப்பைகுளம், சுந்தரங்குண்டு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் மதுரை தூத்துக்குடி 4 வழிச் சாலையை கடந்து செல்ல வேண்டும். அவசரக் கதியில் ரோட்டை கடக்க முற்படும் போது, அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
கள்ளிக்குடி பிரிவு ரோடு சற்று வளைவாக உள்ளது. எதிரே வரும் வாகனங்கள் அருகில் வரும் போது தெரிய வருவதால், பதட்டத்தில் பல வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. அதே போல் அதிவேகமாக வரும் வாகனங்கள் வளைவான பகுதியில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
இது ஒரு புறம் இருக்க, தூத்துக்குடி செல்லும் கண்டெய்னர் லாரிகள் கள்ளிக்குடி பிரிவு ரோட்டோரத்தில் நிறுத்தி ஓய்வு எடுக்கின்றனர். காரியாபட்டி ஊருக்குள் இருந்து வரும் வாகனங்கள் ரோட்டை கடக்க முற்படும் போது, ஒட்டுனர்களுக்கு வாகனம் வருவது மறைக்கப்பட்டு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் டூவீலரில் சென்ற ஒருவர் ரோட்டை கடக்க முற்படும்போது கார் மோதி விபத்தில் சிக்கினார். கண்டெய்னர் லாரிகளை நிறுத்துவதால் வாகனம் வருவது தெரியாமல்தான் விபத்து நடந்ததாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். விபத்து நடந்ததும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிகளை எடுத்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அப்பகுதியில் மரம் இருப்பதால் வாகனம் வருவது தெரியாது. தொடர்ந்து விபத்து நடப்பதால் அச்சத்தில் உள்ளனர்.
எனவே அப்பகுதியிலுள்ள மரத்தை அப்புறப்படுத்தி, கண்டெய்னர் லாரிகள் நிறுத்துவதை தடுத்து, மாற்று இடத்தில் நிறுத்தி ஓய்வெடுக்க போலீசார் அறிவுறுத்த வேண்டும்.