/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் ரோட்டில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்
/
சாத்துாரில் ரோட்டில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்
சாத்துாரில் ரோட்டில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்
சாத்துாரில் ரோட்டில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்
ADDED : மே 22, 2025 11:58 PM
சாத்துார்: சாத்துாரில் ரோட்டில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சாத்துார் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு, பல்க் எதிரில் ,நான்கு வழிச்சாலை பாலத்திற்கு அடியிலும் ஏராளமான மாடுகள் காலை , மாலை நேரங்களில் உலா வருகின்றன. ரோட்டில் பராமரிப்பாளர்கள் இல்லாத நிலையில் தனியாக நடந்து செல்லும் கால்நடைகள் நிழலை பார்த்தவுடன் ரோட்டிலேயே படுத்து விடுகின்றன. குறிப்பாக பாலத்திற்கு அடியில் நிழல் இருப்பதால் கால்நடைகள் அதிக அளவில் நான்கு வழிச்சாலை கீழ் உள்ள பாலங்களில் படுத்து ஓய்வு எடுக்கின்றன.
காலை நேரங்களில் சர்வீஸ் ரோட்டில் உலா வரும் கால்நடைகளால் அவ் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து பாலத்திற்கு அடியில் சென்று கிழக்கு , மேற்கு பக்கம் சர்வீஸ் ரோடு செல்ல விரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக திரும்பும்போது கால்நடைகள் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
பஸ், லாரி போன்ற வாகனங்களும் கால்நடைகள் மீது மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் கால்நடைகள் ரோட்டில் உலாவினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்திருந்த போதும் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் பலர் கால்நடையை ரோட்டில் மேய விட்டு உள்ளனர்.
ரோட்டில் உலா வரும் கால்நடைகளால் நாளுக்கு நாள் விபத்து அபாயம் அதிகரித்து வரும் நிலையில் அதிகாரிகள் கால்நடைகள் ரோட்டில் உலா வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.