/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் சர்வீஸ் ரோட்டில் கிடக்கும் மரக்கிளையால் விபத்து அபாயம்
/
சாத்துார் சர்வீஸ் ரோட்டில் கிடக்கும் மரக்கிளையால் விபத்து அபாயம்
சாத்துார் சர்வீஸ் ரோட்டில் கிடக்கும் மரக்கிளையால் விபத்து அபாயம்
சாத்துார் சர்வீஸ் ரோட்டில் கிடக்கும் மரக்கிளையால் விபத்து அபாயம்
ADDED : நவ 25, 2024 05:30 AM

சாத்துார் : சாத்துார் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் கிடக்கும் மர கிளைகளால் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.
சாத்துார் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் அடுத்தடுத்து வெட்டப்படும் மரக்கிளைகள் உடனடியாக அகற்றப்படாமல் சர்வீஸ் ரோட்டிலேயே கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிர்கள் பலியாகும் அபாயம் உள்ளது.
நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதன் பின் இந்தப் பகுதியில் உள்ள மரக்கிளைகள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக கூறி மரக்கிளைகளை வெட்டினர்.
தற்போது மரக்கிளைகள் மின்கம்பத்தில் உரசுவதாக கூறி மின்துறையினர் மரங்களை வெட்டி வருகின்றனர். இப்படி வெட்டப்படும் மரக்கிளைகள் டிராக்டர் மூலம் உடனுக்குடன் அகற்றப்பட வேண்டும்.
ஆனால் மரக்கிளையில் பெரிய துண்டுகளை மட்டும் டிராக்டரில் ஏற்றிச் செல்லும் ஒப்பந்ததாரர்கள் சிறிய கிளைகளையும் இலைகளையும் சர்வீஸ் ரோட்டிலேயே போட்டுவிட்டு செல்கின்றனர்.
இதனால் இரவு நேரத்தில் இவ்வழியை கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விலகிச் செல்ல இடம் இன்றி கிளைகளில் மோதி தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.
மரக்கிளைகளை வெட்டி விட்டு உடனடியாக அப்புறப்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தட்டும் என விட்டு விடுவதால் இதுபோன்று மரக்கிளைகள் வாரக் கணக்கில் சர்வீஸ் ரோட்டில் கிடக்கும் நிலை உள்ளது.