/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஸ்வநத்தத்தில் ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள்
/
விஸ்வநத்தத்தில் ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள்
விஸ்வநத்தத்தில் ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள்
விஸ்வநத்தத்தில் ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள்
ADDED : ஜூன் 23, 2025 05:43 AM

சிவகாசி : சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் இரவில் நடுரோட்டில் திரியும் மாடுகளால் டூவீலர்களில் செல்பவர்கள் தினமும் விபத்தில் சிக்குகின்றனர்.
சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் மாடுகளை வளர்ப்பவர்கள் பால் கறக்கும் நேரத்தில் மட்டும் பிடித்துச் சென்று விட்டு மீண்டும் ரோட்டிலேயே விட்டு விடுகின்றனர். விஸ்வநத்தம் ரோட்டில் எப்பொழுதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும்.
இப்பகுதியில் மாடுகள் இரவு நேரத்தில் நடு ரோட்டில் மாடுகள் நடமாடுகின்றன. தவிர ஒரு சில மாடுகள் ரோட்டிலேயே படுத்து விடுகின்றன. இதனால் எந்த வாகனமும் எளிதில் சென்று வர முடியவில்லை.
இரவில் டூவீலரில் செல்பவர்கள் மாடுகளால் தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்கள் ஒலி எழுப்புகையில் மாடுகள் மிரண்டு ஓடும்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
சமீபத்தில் இங்கு இரவு எட்டு மணிக்கு டூ வீலரில் வந்த இருவர் மாடுகள் குறுக்கே வந்ததில் கீழே விழுந்து காயமடைந்தனர். எனவே உடனடியாக இப்பகுதியில் ரோட்டில் நடமாடும் மாடுகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.