ADDED : மார் 14, 2024 03:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே அதிவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் சரண்சந்தோஷ் 12. இவர் திருத்தங்கல் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் ஒரு மணி நேரத்தில் 19 முட்டையில் 19 தேசிய தலைவர்கள் படங்களை ஓவியமாக வரைந்து சாதனை படைத்தார். இதில் காந்தி, காமராஜர், வ.உ. சிதம்பரம் பிள்ளை, அப்துல் கலாம், இந்திரா, நேரு போன்ற தேசிய தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்தார். மாணவரை பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

