ADDED : ஏப் 09, 2025 07:50 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களின் வெற்றிகளை கொண்டாடும் வகையில் சாதனையாளர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்தார்.
பெங்களூரு இன்பர்மேட்டிகா பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பு நிபுணர் பாலமுருகன், அமெரிக்காவின் ஹனான் சிஸ்டம் மிச்சிகன் நிறுவனத்தின் பொருட்கள் தொழில்நுட்பவியலாளர் சஹானா சிவசெங் பேசினார். கல்லுாரி துணை தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஸ்ரீமுருகன், முதல்வர் செந்தில் ஆகியோர் வாழ்த்தினர். சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.
