ADDED : ஏப் 11, 2026 08:47 PM
அ நிறம் | அளவு
சாத்துார்:சாத்துார் மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை ,அறிவியல் கல்லுாரியில் 12வது சாதனையாளர்கள் நாள் விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் ராஜீ தலைமை வகித்தார். ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார் . பாண்டிமா தேவி குத்து விளக்கு ஏற்றினார். முதல்வர் சுப்புராஜ் வரவேற்றார்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் ,கேடயம் வழங்கப்பட்டது. நிர்வாக அலுவலர் மாரிக் காளை ஏற்பாடுகள் செய்திருந்தார். பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
