/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அக்மார்க், தரம்பிரிப்பு பயிற்சி கூட்டம்
/
அக்மார்க், தரம்பிரிப்பு பயிற்சி கூட்டம்
ADDED : அக் 28, 2024 05:02 AM
விருதுநகர் : விருதுநகரில் வேளாண் விற்பனை, வணிக துறை சார்பில் வேளாண் விளைபொருட்களை அக்மார்க் தரம்பிரிப்பு செய்தல், பகுப்பாய்வு செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் வணிக துணை இயக்குனர் ரமேஷ் வரவேற்றார். வணிகத்துறை செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். விருதுநகர் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி செயல்பாடுகள் குறித்து பேசினார். மதுரை மண்டல மூத்த விற்பனை அலுவலர் பருப்பு வகைகள், மிளகாய் வற்றல், கொப்பரை போன்ற வேளாண் விளைபொருட்களை தரம்பிரித்தல் பற்றி எடுத்துரைத்தார்.
வேளாண் விற்பனை உட்கட்டமைப்பு திட்டம் குறித்து இதை தொடர்ந்து விளைபொருட்களின் சந்தை நிலையை அறிந்து மின்னணு வர்த்தகம் மூலம் விளைபொருட்களை தரம்பிரித்து விற்பனை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வை வேளாண் அலுவலர்கள் பிரதீபா, சதீஷ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

