/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வழிபாட்டு உரிமைகளை தடுப்போர் மீது நடவடிக்கை: ஹிந்து முன்னணி ஹிந்து முன்னணி கோரிக்கை

ADDED : ஜூலை 11, 2025 03:02 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்ட ஹிந்து முன்னணி செயற்குழு கூட்டம் நத்தம்பட்டி வழிவிடு முருகன் கோயில் திருக்குறள் ஆன்மிக மையத்தில் நடந்தது.
மாநில இணை அமைப்பாளர் பொன்னையா தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர்யுவராஜ், மாவட்ட பொருளாளர் வினோத் குமரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், சித்திரகுப்தன், குமார் பங்கேற்றனர்.
ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையில் அதிகாரம் செய்து ஆணவத்துடன் செயல்பட்டு வரும் அதிகாரிகளை கண்டித்தும்,வழிபாட்டு உரிமைகளை தடுக்கும் அரசு நிர்வாகத்தின் மீதும் நீதி அரசர்கள் நீதி வழங்க வேண்டும்,
வத்திராயிருப்பு அர்ச்சனாபுரத்தில் நல்லதங்காள் கோயிலை திறந்து மக்கள்வழிபாட்டிற்கு வழிவகை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்காமல் சிரமமின்றி வழிபாடு செய்ய வனத்துறையும், அறநிலையத் துறையும், மாவட்ட நிர்வாகமும் ஆவண செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.