/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிழற்குடையில் தண்ணீர் பொங்கிய பிரச்னை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை
/
நிழற்குடையில் தண்ணீர் பொங்கிய பிரச்னை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை
நிழற்குடையில் தண்ணீர் பொங்கிய பிரச்னை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை
நிழற்குடையில் தண்ணீர் பொங்கிய பிரச்னை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை
ADDED : பிப் 16, 2024 02:12 AM
நரிக்குடி:விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மறையூரில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நிழற்குடை திறக்கப்பட்ட 2 நாட்களில் தண்ணீர் பொங்கிய பிரச்னையில் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தும், காண்ட்ராக்டரை கருப்பு பட்டியலில் வைக்கவும் கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.
மறையூயில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்லும் இடத்தில் நிழற்குடை கட்டப்பட்டது. திறக்கப்பட்ட 2 நாட்களில் கட்டடத்தின் பாரம் தாங்காமல் குழாய் உடைந்து தண்ணீர் பொங்கி நிழற்குடை வழியாக வெளியேறியது. இது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நரிக்குடி மறையூரில் கட்டப்பட்ட நிழற்குடையில் இருந்து தாமிரபரணி குடிநீர் வெளியேறியது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உடனடியாக குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது.
நிழற்குடை கட்டும் பணிக்கு தவறான இடத்தினை தேர்வு செய்து வேலை உத்தரவு வழங்கிய நரிக்குடி பி.டி.ஓ., ராஜசேகரன், நிழற்குடைக்கு கீழே செல்லும் குழாயை முறையாக மாற்றி அமைக்க தவறிய இளநிலை பொறியாளர் பிரபா சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
இப்பணிக்கு தவறான தொழில்நுட்ப அறிக்கையை தயார் செய்த உதவி பொறியாளர் புரோஸ்கான், பணியை கண்காணிக்க தவறிய உதவி செயற்பொறியாளர் சங்கர், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் குழாய் செல்வது குறித்து ஆட்சேபம் தெரிவிக்காத குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்படுகிறது. நிழற்குடை பணியினை செய்த ஒப்பந்ததாரர் இசலி ரமேஷை கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.