/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலி நல வாரியம் மூலம் விவசாயிகளிடம் வசூல் தேவை நடவடிக்கை
/
போலி நல வாரியம் மூலம் விவசாயிகளிடம் வசூல் தேவை நடவடிக்கை
போலி நல வாரியம் மூலம் விவசாயிகளிடம் வசூல் தேவை நடவடிக்கை
போலி நல வாரியம் மூலம் விவசாயிகளிடம் வசூல் தேவை நடவடிக்கை
ADDED : பிப் 18, 2024 12:33 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நலவாரியம் அமைத்து தருகிறோம் என அடையாள அட்டை, சந்தா ரசீது அச்சிட்டு வழங்கும் சில மர்மநபர்களால் விவசாயிகள் ஏமாந்து வருகின்றனர்.
மாவட்டத்தின் வறண்ட பகுதிகளில் மக்காசோளம், கம்பு அதிகம் விளைவிப்பது போல், வளமான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதிகளில் நெல், கரும்பு, தென்னை அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இதில் பெரும்பான்மை உள்ள பயிருக்கு நல வாரியம் அமைப்பதாக இல்லாத பொய் தகவல்களை கூறி விவசாயிகளிடம் சிலர் வசூல் செய்கின்றனர். அந்தந்த வட்டார அலுவலர்களின் பதவியை போட்டு போலியாக போட்டு அதில் இவர்களே கையெழுத்து இட்டு நலவாரியங்கள் என ஏமாற்றுகின்றனர். இதற்காக அந்தந்த சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் ரூ.நுாறு வசூல் செய்கின்றனர். ஆண்டுகள் கடந்த பின் தான் இது போலி என்பது பல விவசாயிகளுக்கு தெரிய வருகிறது.
உதாரணமாக வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளில் தென்னை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்து சிலர் ஆப்செட்டில் ரசீதும், அடையாள அட்டை போன்றவற்றை அச்சிட்டுகின்றனர். படிப்பறிவு இல்லாத விவசாயிகளை குறி வைத்து நல வாரியத்தில் சேருங்கள், நிறைய அரசு திட்டங்களில் பலன் கிடைக்கும் என்கின்றனர். இதை நம்பும் விவசாயிகள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்கின்றனர். இவர்களுக்கு அதிகாரிகளின் போலி கையெழுத்தை இட்டு நம்ப வைக்கின்றனர். மேலும் வாரியத்தின் சந்தாவாக ரூ.நுாறு வசூலிக்கின்றனர். இவ்வாறு மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் பல விவசாயிகளிடம் வசூல் நடந்துள்ளது.மாவட்ட நிர்வாகம் இது போன்ற போலிகளை கண்டறிந்துநடவடிக்கை எடுக்க வேண்டும்.