ADDED : மார் 03, 2026 04:58 AM
ராஜபாளையம்: மாவட்டத்தில் கோடை போல் கொளுத்தும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பொது இடங்களில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட இலவச குடிநீர் தொட்டிகள் செயல் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வழக்கமாக மார்ச் மாத பிற்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வருகிறது.
வானிலை அறிவிப்பின்படி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து உச்சத்தை எட்டும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் பொது இடங்களில் செயல்பாடு இல்லாமல் உள்ள குடிநீர் அமைப்புகளால் பயணிகள் உள்ளிட்ட மக்கள் இலவசமாக கிடைக்க வேண்டிய குடிநீரை வேறு வழி இன்றி விலைக்கு வாங்கியும் வாய்ப்பு இல்லாதவர்கள் சுகாதாரமற்ற குடிநீரை பருகும் நிலைக்கு ஆளாகின்றனர்.
எனவே பஸ் ஸ்டாண்ட், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பஸ் ஸ்டாப்புகள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் அரசு சார்பில் தொடங்கிய சுத்திகரித்த குடிநீர் தொட்டிகள், தண்ணீர் குழாய்கள் உள்ளிட்டவைகளில் காட்சிப் பொருளாக உள்ளவற்றை முறையாக பராமரிப்பு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்த் துள்ளனர்.
