ADDED : ஏப் 09, 2026 11:25 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு, செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ம.நீ.ம., இ.கம்யூ., வி.சி., உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
இதில் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகனை வெற்றி பெறச் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் விஜயபிரபாகரனுக்கு சால்வை அணிவித்தார். எம்.எல்.ஏ., சீனிவாசன், நகராட்சித் தலைவர் மாதவன், நகரச்செயலாளர் தனபாலன், தே.மு.தி.க., மாவட்டச் செயலாளர் காஜா ஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
