தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஏமாற்றத்தை அளித்துள்ள பட்ஜெட்: செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவிப்பு

ஏமாற்றத்தை அளித்துள்ள பட்ஜெட்: செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவிப்பு

ஏமாற்றத்தை அளித்துள்ள பட்ஜெட்: செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவிப்பு


UPDATED : ஆக 06, 2026 09:47 PM

ADDED : ஆக 06, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 09:47 PM ADDED : ஆக 06, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:''அரசு ஊழியர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், அதிலும் செவிலியர்களுக்கு தமிழக பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது,'' என, விருதுநகரில் செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொதுச்செயலாளர் சுபின் தெரிவித்தார்.

அவர் கூறியுள்ளதாவது: தமிழக வெற்றிக்கழகம் தேர்தலின் போது கொடுத்த எந்த வாக்குறுதி குறித்தும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்படவில்லை. மேலும் மருத்துவத்தேவைக்காக மக்கள் சொந்தமாக செலவிடும் தொகையை குறைக்கும் நோக்கில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அரசு செயல்படுத்துவதை வரவேற்கிறோம்.

ஆனால் மருத்துவத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற ஊழியர்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில் அதை அதிகரிப்பது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லை.

மூத்த குடிமக்களுக்கு ஆயிரம் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் துவங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது. அதில் மருத்துவர், செவிலியர், இயன்முறை மருத்துவர் நியமனங்களில் நிரந்தரத்தன்மை குறித்த அறிவிப்பு இல்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

மருத்துவத்துறையில் செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு ஊழியர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us