தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பஞ்சு வியாபாரியிடம் ரூ.1.43 லட்சம் மோசடி

பஞ்சு வியாபாரியிடம் ரூ.1.43 லட்சம் மோசடி

பஞ்சு வியாபாரியிடம் ரூ.1.43 லட்சம் மோசடி


UPDATED : செப் 09, 2026 07:35 PM

ADDED : செப் 09, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2026 07:35 PM ADDED : செப் 09, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு வியாபாரி உதயகுமாரிடம் 33, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரூ.1.43 லட்சத்தை மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராஜபாளையத்தை சேர்ந்த பஞ்சு வியாபாரி உதயகுமார். இவரை அலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர், பொதுத்துறை வங்கியில் இருந்து பேசுவதாக கூறினார். கிரெடிட் கார்டு தொகை வரம்பை உயர்த்தி தருவதாக உதயகுமாரிடம் ஆசை வார்த்தை கூறினார்.

அதை நம்பிய உதயகுமார், மர்ம நபரிடம் ஓ.டி.பி., நம்பரை கூறினார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து இரு தவணைகளாக ரூ. 1.43 லட்சம் எடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசிலும், ராஜபாளையம் வடக்கு போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us