/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் அரசு டிப்போக்களில் கூடுதல் பஸ் டிரைவர்கள் கண்டக்டர்கள் தேவை
/
மாவட்டத்தில் அரசு டிப்போக்களில் கூடுதல் பஸ் டிரைவர்கள் கண்டக்டர்கள் தேவை
மாவட்டத்தில் அரசு டிப்போக்களில் கூடுதல் பஸ் டிரைவர்கள் கண்டக்டர்கள் தேவை
மாவட்டத்தில் அரசு டிப்போக்களில் கூடுதல் பஸ் டிரைவர்கள் கண்டக்டர்கள் தேவை
ADDED : ஜன 07, 2024 03:50 AM
மாவட்டத்தில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் 1 மற்றும் 2 என 9 டிப்போக்கள் உள்ளது.
இவற்றின் மூலம் டவுன், புறநகர் பஸ் என 400க்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்கி வருகிறது. இவற்றின் மூலம் மாவட்ட மக்கள் தங்களது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு டிப்போவிலும் பல டிரைவர், கண்டக்டர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களின் காலி பணியிடம் நிரப்பாததால், தினமும் பணி முடிந்து வீடு திரும்பும் நிலையில் உள்ளவர்களை கூடுதல் டிரிப்புகள் பணியாற்ற அந்தந்த டிப்போ மேனேஜர்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
அதனால் கோபத்திற்கும், மன வேதனைக்கும் ஆளாகும் டிரைவர், கண்டக்டர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றாமலும், பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமலும் பஸ்களை இயக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் பெண்களுக்கு இலவச பயணம் என அறிவிக்கப்பட்டதால் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்துள்ள அரசு பஸ் ஊழியர்கள் பெண் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதில் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
அதிலும் காலை, மாலை வேலை நேரங்களிலும், மதியம் பணி மாறுதல் நேரங்களிலும் அரசு டவுன் பஸ்கள் சரியாக இயங்குவதில்லை. பல பஸ்கள் அந்தந்த பஸ் ஸ்டாண்டுகளிலும், டிப்போக்களிலும் நிறுத்தி வைக்கப்படுவதை பார்க்க முடிகிறது.
இதனால் பிரச்சனை ஏற்படும் கிராமங்களுக்கு மட்டும் சற்று தாமதமானாலும் பஸ்களை இயக்குகின்றனர். ஆனால், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவில் இயங்கும் டவுன் பஸ்களின் டிரிப்புகளை கட் செய்து விடுகின்றனர்.
இதனால் 15 நிமிடத்திற்கு ஒரு முறை இயங்கும் பஸ்கள் கூட 30 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் சூழல் ஏற்பட்டு மக்கள் பஸ் ஸ்டாப்புகளிலும், பஸ் ஸ்டாண்டிலும் காத்து கிடக்கும் நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒவ்வொரு டிப்போவிலும் குறைந்தபட்சம் 5 முதல் 10 பேர் வரை பணி ஓய்வு பெற உள்ளதாகவும், அதனால் காலிப்பணியிடங்கள் அதிகரித்து முழு அளவில் பஸ்கள் இயக்குவதில் தேக்க நிலை ஏற்படும் அபாயம் மாவட்டத்தில் உருவாகி வருகிறது.
எனவே, ஒவ்வொரு டிப்போவிலும் ஏற்பட்டுள்ள டிரைவர், கண்டக்டர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என போக்குவரத்து துறை ஊழியர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.