தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஈரோடுக்கு கூடுதல் பஸ் வசதி

ஈரோடுக்கு கூடுதல் பஸ் வசதி

ஈரோடுக்கு கூடுதல் பஸ் வசதி


ADDED : ஜன 30, 2024 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2024 07:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையத்தில் இருந்து ஈரோட்டிற்கு தினமும் 2 பஸ்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு பஸ் இயக்கப்பட்டுள்ளது.

இதன்படி ராஜபாளையம் டிப்போவில் இருந்து தினமும் மதியம் 12:15, இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம், மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோட்டிற்கு 2 பஸ்கள் இயங்கி வருகிறது.

தற்போது ஈரோடு டிப்போவிலில் இருந்து தினமும் இரவு 7: 45 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 3:00 மணிக்கு ராஜபாளையம் வந்தடைகிறது. மறு மார்க்கத்தில் தினமும் காலை 7:45 மணிக்கு ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 3:00 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.

கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதால் ராஜபாளையம், தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜவுளி, நெசவு, விசைத்தறி, கார்மெண்ட்ஸ் நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us