/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலையில் கூடுதல் ஹைமாஸ் தேவை: தொடரும் இரவு, அதிகாலை நேர விபத்துக்கள்
/
நான்கு வழிச்சாலையில் கூடுதல் ஹைமாஸ் தேவை: தொடரும் இரவு, அதிகாலை நேர விபத்துக்கள்
நான்கு வழிச்சாலையில் கூடுதல் ஹைமாஸ் தேவை: தொடரும் இரவு, அதிகாலை நேர விபத்துக்கள்
நான்கு வழிச்சாலையில் கூடுதல் ஹைமாஸ் தேவை: தொடரும் இரவு, அதிகாலை நேர விபத்துக்கள்
ADDED : ஜூன் 10, 2025 12:53 AM

விருதுநகர் பட்டம்புதுார், எட்டூர் வட்டம், சூலக்கரை, உப்பத்துார், வெங்கடேஸ்வரபுரம், பெத்து ரெட்டிபட்டி, நள்ளிவிலக்கு, சிவனைந்தபுரம் விலக்கு, பெரிய ஓடைப்பட்டி விலக்கு ஆகிய பகுதிகளில் நான்கு வழிச்சாலையில் இரவு, அதிகாலை நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
வெளியூர் செல்வதற்காக நான்கு வழிச்சாலைக்கு வரும் கிராம மக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் போதும் டூவீலர் ஓட்டிகள் சாலையை கடக்க முற்படும் போதும் நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
பலர் படுகாயம் அடைவதோடு உயிர் பலியாகும் சம்பவங்களும் நடந்து வருகிறது. அதிகாலை, இரவு நேரங்களில் இந்த பகுதியில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாத நிலையில் வாகன ஓட்டிகள் சாலையை கடப்பவர்கள் மீதும் ஓரமாக நடந்து செல்பவர்களை காண முடியாமல் போவதால் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்கள் ஏற்படுகிறது.
மேலும் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் பேரி கார்டுகள் மீது மோதி விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. பெரும்பாலும் முதியவர்கள், மனநலம் பாதித்தவர்கள் அதிக அளவில் விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பகுதிகளை விபத்து பகுதியாக அறிவித்துள்ள போதிலும் இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
எனவே நான்கு வழிச்சாலையின் முக்கிய சந்திப்புகளில் ஹைமாஸ் விளக்குகள் அமைப்பதன் மூலம் அதிகாலை, இரவு நேரத்தில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கலாம். எனவே நகாய் அதிகாரிகள் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.