/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜன.20 வரை 'வெயிட்டிங் லிஸ்ட்' கூடுதல் சிறப்பு ரயில்கள் தேவை
/
ஜன.20 வரை 'வெயிட்டிங் லிஸ்ட்' கூடுதல் சிறப்பு ரயில்கள் தேவை
ஜன.20 வரை 'வெயிட்டிங் லிஸ்ட்' கூடுதல் சிறப்பு ரயில்கள் தேவை
ஜன.20 வரை 'வெயிட்டிங் லிஸ்ட்' கூடுதல் சிறப்பு ரயில்கள் தேவை
ADDED : ஜன 18, 2025 12:39 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் வந்தேபாரத், தேஜஸ், ரயில்களில் கூட ஜன.20 வரை வெயிட்டிங் லிஸ்ட் நிலை ஏற்பட்டுள்ளதால் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினமும் 11 எக்ஸ்பிரஸ் ரயில்களும், வந்தே பாரத், தேஜஸ் ரயில்களும், சிலம்பு எக்ஸ்பிரஸ் போன்ற வாரத்தில் மூன்று நாள் இயங்கும் ரயில்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்கி வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்துவிட்டு நேற்று முதல் சென்னைக்கு திரும்ப துவங்கி உள்ளனர்.
ஆனால், ஜன.20 வரை மதுரை வழியாக இயங்கும் வைகை, குருவாயூர், நெல்லை, பொதிகை, முத்துநகர், கொல்லம், திருச்செந்தூர், அனந்தபுரி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத 'ரெக்ரக்ட்' நிலை ஏற்பட்டு விட்டது. அதிக கட்டணம் கொண்ட வந்தேபாரத், தேஜஸ் ரயில்களில் கூட வெயிட்டிங் லிஸ்ட் நிலை ஏற்பட்டுள்ளது. தட்கல் டிக்கெட்டும் சரிவர கிடைக்கவில்லை. அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் கூட போதுமானதாக இல்லை.
இதனால் பல ஆயிரம் தென்மாவட்ட பயணிகள், எப்படி சென்னைக்கு செல்வது என்ற பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே, நாகர்கோவில், நெல்லை, செங்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு உடனடியாக கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.