/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
4 ரயில்களில் கூடுதலாக முன்பதிவில்லா பெட்டிகள்
/
4 ரயில்களில் கூடுதலாக முன்பதிவில்லா பெட்டிகள்
ADDED : டிச 05, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : தென் மத்திய ரயில்வே சார்பில் தமிழகம் வழியாக இயக்கப்படும் 4 ரயில்களில் 2 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.
திருப்பதி -- கொல்லம், கச்சேகுடா --- முர்தேஷ்வர், கச்சேகுடா -- மதுரை, மதுரை -- கச்சேகுடா ஆகிய ரயில்களில் கூடுதலாக தலா 2 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் இனி 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயங்கும்.