/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போதிய அளவில் உரம் இருப்பு இணை இயக்குனர் தகவல்
/
போதிய அளவில் உரம் இருப்பு இணை இயக்குனர் தகவல்
ADDED : அக் 29, 2024 04:32 AM
விருதுநகர்: வேளாண் இணை இயக்குனர் விஜயா செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை நெல் 11 ஆயிரத்து 402 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது.
அது போல் சிறுதானியங்கள் 23 ஆயிரத்து 805 எக்டேர் பரப்பிலும், பயறு வகை பயிர்கள் 2241 எக்டேர் பரப்பிலும் எண்ணெய் வித்து பயிர்கள் 1267 எக்டேர் பரப்பிலும், பருத்தி 6294 எக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 203 தனியார் உர விற்பனை நிலையங்கள், 179 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வினியோகிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் தற்போது யூரியா 3164 டன், டி.ஏ.பி., 1144 டன், பொட்டாஷ் 248 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1969 டன் விவசாயிகளின் தேவைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது வேளாண் விளைபொருட்கள் சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளது.
மேலும் உரம் கிடைப்பதில் பிரச்னை, அதிக விலைக்கு விற்பனை செய்வது, பிற உரங்களை வாங்க கட்டாயப்படுத்துவது, உரம் பதுக்கல் பற்றிய புகார்களை அந்தந்த பகுதிகளுக்கான வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் விவசாயிகள் தெரிவிக்கலாம், என்றார்.