/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
/
அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
ADDED : மார் 12, 2024 11:53 PM

விருதுநகர்: விருதுநகர் அ.தி.மு.க., சார்பில் தேசபந்து மைதானத்தில் தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து மனித சங்கிலி பேராட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடந்தது.
இந்த போராட்டத்தில் அ.தி.மு.க., நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
* சிவகாசி, திருத்தங்கலில் நடந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்து பேசுகையில் போதைப் பொருட்களால் கலாச்சார சீர்கேடு ஏற்படுகிறது. போதைப் பொருள்களை தடுக்க வேண்டும். போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும், என்றாார்.
மாநில ஜெ பேரவை துணை செயலாளர் கணேசன், மாவட்ட மகளிரணி செயலாளர் சுபாஷினி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, ஆரோக்கியம், லட்சுமிநாராயணன், பாலாஜி, மாநகர பகுதி செயலாளர்கள் சரவணக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், சாம், கட்சியினர் கலந்து கொண்டனர்.
* ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.எல்.ஏ.மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரபிரபா, கட்சி நிர்வாகிகள் முத்துராஜ், முத்தையா, மயில்சாமி, முருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
* சாத்துார் நகரசெயலாளர் இளங்கோவன், மாநிலஜெ., பேரவை இணைச் செயலாளர் சேதுராமானுஜம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முககனி, மேற்கு ஒன்றியசெயலாளர் தேவதுரை, வக்கீல்கள் கிருஷ்ணன், பாஸ்கரன், தொழிற்சங்க பொருளாளர் சுப்புராஜ், கவுன்சிலர்கள் கவிதா கருப்பசாமி , மாரியம்மாள், வெற்றி செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் முனிஸ்வரன், கஸ்துாரி, முகமது ரபீக், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் அழகாபுரி ராஜேந்திரன் உட்பட ஏராளமான பேர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

