/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற அறிவுரை
/
தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற அறிவுரை
ADDED : மார் 18, 2024 12:00 AM
ராஜபாளையம் : அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு 48 மணி நேரம் முன்பு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும், என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தில் தனியார் கட்டடங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் அகற்றுவது தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தையடுத்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்: லோக்சபா தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினர் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசியல் கட்சி வேட்பாளர்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு கூட்டம் நடைபெறும் இடம், விபரங்களை உரிய விண்ணப்பத்துடன் 48 மணி நேரத்திற்கு முன் இணையதளத்தில் விண்ணப்பித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
ஒலிபெருக்கியுடன் பிரசாரம் செய்ய போலீஸ், ஆர்.டி.ஓ., விடம் தடையில்லா சான்று பெறுவதுடன் கூம்பு வடிவிலான ஒலி பெருக்கி பயன்படுத்த கூடாது.
நோட்டீசில் அச்சிட்டவர், வெளியிடுபவர் பெயர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
தனியார் இடங்களில் உரிமையாளர் அனுமதி பெற்றிருந்தாலும் சுவர் விளம்பரங்கள், கொடி நடுதல், பிளக்ஸ், நோட்டீஸ் ஒட்டுதல், வாசகங்கள் எழுத கூடாது. அரசு கட்டடங்களிலும் இவற்றுக்கு அனுமதி இல்லை, என்றார்.
தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 2166 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 04562 252 100, 221 301, 221 302, 221 303, மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை 1950, 04562 234 600 என்ற தொலை பேசி எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் C-VIGIL என்ற செயலி மூலமும் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

