ADDED : மார் 17, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே குவிளங்குளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதை செயல் விளக்கம் மூலம் காட்டினர்.
கமுதி நம்மாழ்வார் வேளாண், தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சிக்காக விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்துகள் தெளிப்பதை செயல் விளக்கமாக அளித்தனர். பயிர் கண்காணிப்பு, வயல் மேப்பிங், பூச்சிகளை கண்டறிதல் நீர் பாசனம் ஆகிய பணிகளுக்கு தற்போது ட்ரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன எனவும் விவசாயிகளுக்கு விளக்கினர்.
பயிற்சி ஏற்பாடுகளை வேளாண் மாணவிகள் ஐஸ்வர்யா, அதிகாபாத்திமா, காட்லின் ஷகானா , தேவதர்ஷினி, இலக்கியா, காவியா, ரெஜினா, ரூபா, வர்ஷா உள்ளிட்ட மாணவிகள் செய்தனர்.