ADDED : ஏப் 04, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரத்தில் கிராமப்புற விவசாய பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயின்று வரும் மதுரை வேளாண் கல்லுாரி மாணவி ஹர்ஷினி கிடை போடுதல் எனும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பாரம்பரியமாக செய்து வரும் விவசாயி கண்ணப்பனுடன் பேசி பல தகவல்களை தெரிந்து கொண்டார். விவசாயி 60 ஆடுகள் வைத்துள்ளார்.
இரவு முழுவதும் கிடை போட்டு விட்டு காலை 9:30 மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார். ஆட்டு எரு மண் வளத்தை பெருக்கி பசுமை புரட்சிக்கு வித்திடுகிறது. எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு நுண்ணுாட்டச்சத்துக்களும், தாது உப்புகளும் அதிகமாக காணப்படும் இவ்வாறு பல்வேறு அனுபவங்களை தெரிந்து கொண்டார்.

