/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேளாண் வனவியல் திறன் வளர்ச்சி கருத்தரங்கு
/
வேளாண் வனவியல் திறன் வளர்ச்சி கருத்தரங்கு
ADDED : ஜன 10, 2024 12:00 AM
விருதுநகர் : விருதுநகரில் வனத்துறை சார்பில் வேளாண் வனவியல் தொடர்பான திறன் வளர்ச்சி, விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கு நடந்தது.
விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மண்வளத்தை பாதுகாப்பது, மரம் வளர்ப்பது, சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பயிற்சியின் நோக்கம்.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து வேளாண் காடுகளில் மரங்களை வளர்ப்பது குறித்தும், அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் பேசினார். தோட்டக்கலை பயிர் சாகுபடியில் வனப்பயிர்களின் பங்கு, முன்னோடி தொழில்நுட்பம், மாசு கட்டுப்பாடு என பல்வேறு தலைப்புகளில் அலுவலர்கள் பேசினர்.
மேகமலை புலிகள் காப்பக தலைமை வன பாதுகாவலர் பத்மாவதி, துணை இயக்குனர் திலீப்குமார், கோட்ட வன அலுவலர் நவநீதகிருஷ்ணன், வேளாண் இணை இயக்குனர் விஜயா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

