ADDED : பிப் 01, 2026 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி பராசக்தி காலனியில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.,சார்பில்' விடியா ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி 'என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீடு தோறும் சென்று மக்களிடம் பிரச்னைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து விலைவாசி உயர்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அவரிடம் நல்லாட்சி தருபவர்களுக்கு ஓட்டு என மக்கள் கூறினர். நிச்சயமாக நல்லாட்சி வழங்கப்படும் என அவர் கூறினார். கட்சியினர் விலைவாசி உயர்வு குறித்த பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

