ADDED : பிப் 02, 2026 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காய்கறி விற்று தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க., அறிவித்த முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் தேர்தல் பிரசாரத்தை துவைக்கினார்.
காய்கறி மார்க்கெட்டில் தேர்தல் வாக்குறுதி குறித்த துண்டு பிரசுரங்களை மக்கள், வியாபாரிகளிடம் வினியோகித்து ஓட்டு சேகரித்தார். அப்போது ஒவ்வொரு காய்கறி கடைகளுக்கும் சென்ற முன்னாள் அமைச்சர் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்தார். வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

