ADDED : டிச 15, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க., கட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு வர்த்தக சங்கம் கட்டடம் எதிரில் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. சட்டசபை தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்காக தயாராகி வருகின்றன. அ.தி.மு.க., நகர மகளிர் அணி இணைச் செயலாளர் சித்ரா தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் ராமர் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
ஒன்றிய செயலாளர் யோக வாசுதேவன், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் சங்கர்குமார், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் ராமநாதன், சிறுபான்மை பிரிவு செயலாளர் இஸ்மாயில், மாவட்ட இளைஞரணி செயலாளர் விமல் குருசாமி, இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சக்கரவர்த்தி சங்கர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

