ADDED : செப் 13, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், செப். 12–
கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் 2026–27ம் ஆண்டு வேளாண் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய்க்கான இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க மதிப்புக் கூட்டு தொகுப்பு, செயல்விளக்கத்திடல் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது.
இது நிலக்கடலை, சூரியகாந்தி போன்ற பயிர்களுக்காக செயல்படுத்தப்படும். காரியாபட்டி, எம்.ரெட்டியபட்டி, நரிக்குடி, வத்திராயிருப்பு, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கடலை செயல்விளக்கத்திடலின் கீழ் 100 எக்டேர் தேர்வு செய்து அனைத்து தொழில்நுட்பங்களையும் உட்புகுத்தி நிலக்கடலை விளைச்சலை உயர்த்ததிட்டமிடப்பட்டுள்ளது.சூரியகாந்தி பயிரில் 300 எக்டேரில்செயல்விளக்கத்திடல் செயல்படுத்தப்படும், என்றார்.
