/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அலைபேசி அதிக நேரம் சார்ஜ் செய்வதை தடுக்க அலாரம் கருவி கண்டுபிடிப்பு
/
அலைபேசி அதிக நேரம் சார்ஜ் செய்வதை தடுக்க அலாரம் கருவி கண்டுபிடிப்பு
அலைபேசி அதிக நேரம் சார்ஜ் செய்வதை தடுக்க அலாரம் கருவி கண்டுபிடிப்பு
அலைபேசி அதிக நேரம் சார்ஜ் செய்வதை தடுக்க அலாரம் கருவி கண்டுபிடிப்பு
ADDED : நவ 16, 2025 03:47 AM

அருப்புக்கோட்டை: அலைபேசியில் அதிக நேரம் சார்ஜ் செய்வதை தடுக்கும் வகையில் புதிய கருவியை அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பள்ளியின் 10 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் திவ்யதர்ஷனா சுபாஷினி லிதன்யா ஸ்ரீ ஆகியோர் 'ஆக்ஸிடெண்ட் பிரிவென்டிங் அலாரம் பார் எலக்ட்ரானிக் கேட்ஜஸ்' என்ற கருவியை கண்டுபிடித்துள்ளனர். மின்னணு சாதனங்களால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க இந்த கருவி உதவும் கருவியை பயிற்சியாளர் இந்துமதி வழிகாட்டி ஆசிரியை மனோன்மணி ஆகியோருடன் அட்டல் ஆய்வகத்தில் பயிற்சி எடுத்தனர்.
இது குறித்து மாணவிகள் : நவீன மின்னணு சாதனங்களான அலைபேசிகள், லேப்டாப்புகள், ஹெட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், ஐ பாடுகள், கொசு மட்டைகள், டார்ச் லைட்டுகள் உள்ளிட்டவைகளில் லித்தியம், அயன் பேட்டரிகள் பயன்படுத்த படுகின்றன. இந்த பேட்டரிகள் அதிக நேரம் சார்ஜ் செய்வதை தடுக்க உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. இருப்பினும் தொடர்ந்து அதிக நேரம் சார்ஜ் செய்வதால் விபத்துகள், பேட்டரி சீரழிவு, வெப்பம் உருவாகுதல், செயல் திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். தொடர்ச்சியாக அதிக சார்ஜிங் மற்றும் வெப்பம் காரணமாக பேட்டரி வீக்கம் அடைந்து வெடித்து சிதறி தீப்பற்றும் வாய்ப்பு உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில் நாங்கள் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளோம். இதை பயன்படுத்தி சார்ஜ் துவங்கியதும் அலாரம் அடிக்கும். இதனால் இணைப்பு சரியாக உள்ளதா என்பது பயனருக்கு தெரியும். பயனர் எவ்வளவு நேரம் சார்ஜ் செய்ய வேண்டும் என்று டயமரை அமைத்துக் கொள்ளலாம். இதனால் தேவையான அளவு மட்டும் மின்சாரம் பயன்படும். குறிப்பிட்ட அளவு நேரத்தை செட் செய்தவுடன் சார்ஜ் முடிந்தவுடன் கருவி அலாரம் செய்யும். குறைந்த செலவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மின்சாரத்தை சிக்கனம் ஏற்படுத்தும் வகையிலும் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை பாராட்டி இன்ஸ்பயர் விருது மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும் பெற்றுள்ளோம். என்று கூறினர்.
வெற்றி பெற்ற மாணவிகளை தேவாங்கர் மகாஜன சபை தலைவர் பார்த்தசாரதி மல்லையா, பொருளாளர் கண்ணன், செயலாளர். சரவணன், பள்ளிச்செயலாளர் சங்கர்ராம், தலைமை ஆசிரியை கற்பகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

