/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவி பலாத்கார வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்; ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை பேட்டி

ADDED : டிச 28, 2024 06:55 AM
அருப்புக்கோட்டை :   ''சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும். யாரும் தப்பி விடக்கூடாது,'' என, விருது நகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை தெரிவித்தார்.
கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் ம.தி.மு..க., பொது செயலாளர் வைகோ எம்.பி., நிதியின் கீழ் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 லட்சத்திலான மேல்நிலைத்தொட்டி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற துரை கூறியதாவது: தமிழகம் முழுவதும் காட்டுப்பன்றிகள் பிரச்னை விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. மத்திய அரசு வனத்துறை சட்டத்தை மாற்ற வேண்டும்.
ஜனவரி மாதம் நடக்கவுள்ள லோக்சபா கூட்டத்தொடரில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து பேச உள்ளேன். தமிழக அரசு அதற்காக புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இச்சட்டம் நிறைவேற்றப்படும்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நன்கு படித்தவர். முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி. நான்காம் தர அரசியல்வாதி போல் செயல்படுவது கவலைக்குரியது.
மறைந்த பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார மாற்றத்திற்கான கொள்கைகளை கொண்டு வந்தார். வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் நிதி வந்ததே அவரது காலத்தில் தான்.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு போலீசார் சரியான நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.