/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பருத்தி எடுப்பவர்களுக்கு அலர்ஜி: வீணாவதால் விவசாயிகள் அச்சம்
/
பருத்தி எடுப்பவர்களுக்கு அலர்ஜி: வீணாவதால் விவசாயிகள் அச்சம்
பருத்தி எடுப்பவர்களுக்கு அலர்ஜி: வீணாவதால் விவசாயிகள் அச்சம்
பருத்தி எடுப்பவர்களுக்கு அலர்ஜி: வீணாவதால் விவசாயிகள் அச்சம்
ADDED : மே 07, 2025 01:31 AM
நரிக்குடி: நரிக்குடி பகுதியில் பருத்தி எடுப்பவர்களுக்கு அலர்ஜி ஏற்படுவதால் பறிக்காமல் செடியில் விடுவதால் நஷ்டம் ஏற்படுமென்பதால்விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
நரிக்குடி கிளவிகுளத்தில் 150க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். முழுக்க விவசாயத்தை நம்பி உள்ளனர். காலத்தில் நெல் பயிரிட்டு அறுவடை செய்தனர். கோடை கால பயிராக பருத்தி சாகுபடி செய்து உள்ளனர்.
நன்கு வளர்ந்த நிலையில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டது. மருந்து தெளித்தனர்.
நன்கு விளைந்து பருத்தி வெடித்து வருகிறது. கூலி ஆட்களை விட்டு பருத்தி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பருத்தி எடுத்த அக்கிரமாங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு முகம், கை, கால்கள் வீங்கி, உடலில் அரிப்பு ஏற்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து பருத்தி எடுக்க கூலி ஆட்களும், சொந்த ஆட்களுமே தயக்கமடைந்து வருகின்றனர். இதனால் பருத்தி விளைந்தும் பறிக்க முடியாமல் வீணாகி நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதனால் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து தேவையான ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அக்கிராமத்தினர் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயம் செய்துள்ளோம். நல்ல நிலையில் பருத்தி வெடித்துள்ளது. பருத்தி பறிக்க நினைக்கும் போது அலர்ஜி ஏற்பட்டு கூலி ஆட்கள் வர தயக்கம் காட்டுகின்றனர். அப்படியே விட்டு விட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க தேவையான ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.