ADDED : ஏப் 15, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் 1984 --86ல் எம்.பி.ஏ. படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
துறைத் தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வேந்தர் ஸ்ரீதரன் பேசினார். பின்னர் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்புகளுக்கு சென்று தற்போது பணி புரியும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடி தங்களது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் வாசு, கதிரவன், ஜெயக்குமார், ராஜேஷ், அமல்ராஜ், சங்க தலைவர் முருகேஸ்வரி, பேராசிரியர்கள் செய்திருந்தனர்.