ADDED : ஜூலை 07, 2026 04:14 AM

அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி மெப்கோ ஸ்லெங் பொறியியல் கல்லுாரியில் 2001 ல் பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்களின் 25 ம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு நடந்தது.
முன்னாள் மாணவர்களை கல்லுாரி நிர்வாகம், முன்னாள் மாணவர் சங்கத்தினர் வரவேற்றனர். கல்லுாரி முதல்வர் அறிவழகன் தலைமை வகித்தார். கல்லுாரி முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, பாலகிருஷ்ணன் வாழ்த்தினர். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முருகவேல் பேசினார். முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
