ADDED : ஜூலை 21, 2026 03:06 AM

சிவகாசி: சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் எம்.சி. கிராண்ட் 2026 என்ற பெயரில் முன்னாள் மாணவர் சந்திப்பு நடந்தது.
மீண்டும் ஒன்றிணைவோம் நினைவுகளை மீட்டெடுப்போம் உறவுகளை புதுப்பிப்போம் என்ற கருப்பொருளில் 1988 முதல் 2025 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்தனர். கல்லுாரி முதல்வர் அறிவழகன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முருகவேல், செயலாளர் சங்கர் பேசினர்.
முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. கல்லுாரி வளாகத்தை மாணவர்கள் பார்வையிட்டு தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர் சங்க துணைத் தலைவர்கள் ஜெயந்தி காமக், பிரியங்கா இணைச்செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
