/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் தினம் ஒரு விபத்து
/
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் தினம் ஒரு விபத்து
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் தினம் ஒரு விபத்து
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் தினம் ஒரு விபத்து
ADDED : பிப் 17, 2024 04:35 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் இருந்து சொக்கநாதன்புத்தூர் விலக்கு வரை உள்ள மதுரை--கொல்லம் தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக சிதைந்து காணப்படுவதால் தினம் ஒரு விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இதனை சீரமைப்பதில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலட்சியமாக உள்ளது.
மதுரை --கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது திருமங்கலத்தில் இருந்து கிருஷ்ணன்கோவில் வரை நான்கு வழி சாலை பணிகள் நடந்து வருகிறது. இதனால் கிருஷ்ணன் கோவில் முதல் ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி, ராஜபாளையம், சேத்தூர், தேவதானம் வழியாக சொக்கநாதன்புத்தூர் விலக்கு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
இந்த வழித்தடத்தில் ஏராளமான கனரக வாகனங்கள் பயணித்து வரும் நிலையில், நாளுக்கு நாள் ரோடு அதிகளவில் சேதமடைந்து தினம் ஒரு விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்து வருகின்றனர். பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
இந்த ரோட்டின் வழியாக கலெக்டர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அடிக்கடி பயணித்து வரும் நிலையில் ரோட்டை சீரமைப்பதில் அலட்சியம் காட்டுவதால் மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலை மரணச்சாலையாக மாறிவருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் ரோடு சீரமைக்கும் பிரச்சினையில் தீவர கவனம் செலுத்தி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.