/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சியின் கொசு ஒழிப்பு பணி செலவுகள் தணிக்கை அவசியம்
/
நகராட்சியின் கொசு ஒழிப்பு பணி செலவுகள் தணிக்கை அவசியம்
நகராட்சியின் கொசு ஒழிப்பு பணி செலவுகள் தணிக்கை அவசியம்
நகராட்சியின் கொசு ஒழிப்பு பணி செலவுகள் தணிக்கை அவசியம்
ADDED : டிச 04, 2024 04:36 AM
விருதுநகர்: விருதுநகரில் நகராட்சியின் பெயரளவிற்கு நடக்கும் கொசு ஒழிப்பு பணியால் அதன் மீதான செலவுகள் தணிக்கை வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கொசு ஒழிப்பு பணிகள் மந்தமான நிலையில் நடந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஆனால் நகராட்சியில் தினசரி கொசு ஒழிப்பு பணிகள் பெயருக்கு நடத்தி கணக்கு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். அதே போல் சுகாதாரத்துறையும் டெங்கு ஏற்பட்டால் அதை வெளிப்படையாக கூறுவது கிடையாது. நகராட்சியிடம் தெரிவித்து அவர்கள் அங்கு ஆய்வுக்கு சென்று டயர், தேங்காய் ஓடுகளில் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்திவிடுகின்றனர். பின் பிளீச்சிங் பவுடரை கொட்டி செல்கினறனர்.
பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு வழங்குகின்றனர். இது தான் டெங்கு தடுப்பு பணியா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். வீடுகள் தோறும் சென்று ஆய்வு செய்வது குறைந்து வருகிறது.
ஆனால் கொசு ஒழிப்பு பணிகள் நடந்ததாக கூறப்படும் இடங்களில் அதிகளவிலான கொசுத்தொல்லை இன்னும் இருக்கிறது. முதல்வர் வந்த போது நகரை சுத்தப்படுத்தி துாய்மையாக்கிய அதிகாரிகள் தற்போது ஹாயாக இருக்கின்றனர்.
மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே நகராட்சியின் கொசு ஒழிப்பு பணிகளின் மீதான செலவுகளை தணிக்கை செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
பெயருக்கு செய்யாமல் முழுவீச்சில் கொசு ஒழிப்பு பணிகளை செய்ய வேண்டும். சுகாதாரத்துறையும் டெங்கு பாதிப்பை எடுத்துக்கூறி அப்பகுதியை சுற்றியுள்ள வீடுகளிலும் கள ஆய்வு நடத்தி டெங்கு கொசு உற்பத்தியாகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.