/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெள்ளூரில் தலைகீழாக தொங்கும் வழிகாட்டும் ஊர் பெயர் பலகை
/
வெள்ளூரில் தலைகீழாக தொங்கும் வழிகாட்டும் ஊர் பெயர் பலகை
வெள்ளூரில் தலைகீழாக தொங்கும் வழிகாட்டும் ஊர் பெயர் பலகை
வெள்ளூரில் தலைகீழாக தொங்கும் வழிகாட்டும் ஊர் பெயர் பலகை
ADDED : அக் 30, 2025 03:37 AM

சிவகாசி: சிவகாசி அருகே வெள்ளூரில் கொத்தனேரி செல்லும் ரோட்டில் வழிகாட்டும் ஊர் பெயர் பலகை தலைகீழாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
சிவகாசி அருகே வெள்ளூரில் இருந்து எம்.புதுப்பட்டி, கொத்தனேரி செல்லும் ரோடுகள் பிரிந்து செல்கின்றது. குமாரபுரம், கவுண்டம்பட்டி கொத்தனேரி பிரிந்து செல்லும் ரோட்டில் வழிகாட்டும் ஊர் பெயர் பலகை உள்ளது. இந்தப் பலகை தலைகீழாக இருப்பதோடு வழிகாட்டும் குறியீடுகளும் தவறான வழியை காட்டுகிறது.
இதனால் வெளியூர்களில் இருந்து வருகின்ற வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் வேறு ரோட்டில் சென்று விடுகின்றனர். நீண்ட துாரம் வந்த பிறகு தவறான பாதையில் வந்தது தெரிய வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பெயர் பலகையை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.