sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆண்டாள் கோயில் ஆர்ட்டிகிள்

/

ஆண்டாள் கோயில் ஆர்ட்டிகிள்

ஆண்டாள் கோயில் ஆர்ட்டிகிள்

ஆண்டாள் கோயில் ஆர்ட்டிகிள்


ADDED : ஆக 07, 2024 06:31 AM

Google News

ADDED : ஆக 07, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியாழ்வாரான விட்டு சித்தன்

மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி இப்பரிசை கிடைக்க செய்தார். இந்த காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர். மக்களின் கண் பெருமாள் மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் அஞ்சி 'திருப்பல்லாண்டு' பாடினார். அதுவரையில் 'விட்டுசித்தன்' (விஷ்ணு சித்தர்) என்று அழைக்கப்பட்ட இவர், 'பெரியாழ்வார்' எனும் திருநாமம் பெற்றார்.

- பாரத்குமார்,

நந்தா ஏஜென்சி, ஸ்ரீவில்லிபுத்துார்

கிளியை துாதனுப்பிய ஆண்டாள்

ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை துாது அனுப்பினாளாம். ஆகவே, ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும் விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள். வியாசரின் மகனாகிய, சுகப்பிரம்மரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வ துண்டு. இத்தலத்தில் ஆண்டாள் கையில் வைப்பதற்காக தினமும் இலைகளால் கிளி செய்யப்படுகிறது. மாலையில் சாயரட்சை பூஜையின் போது இந்த கிளி ஆண்டாளுக்கு வைக்கப்படுகிறது. ஆண்டாள் மறுநாள் காலை வரையில் கையில் கிளியுடன் இருக்கிறாள்.

--மான் ராஜ் எம்.எல்.ஏ., ஸ்ரீவில்லிப்புத்துார் தொகுதி

திருப்பாவை விமானம்

மார்கழி நோன்பிருந்த ஆண்டாள், திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினாள். 30 பாசுரங்கள் உடையது இது. கண்ணனை தரிசிக்க தோழியர்களை எழுப்புவது போன்ற பொருளில் இப்பாசுரம் பாடப்பட்டிருக்கும். தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஸ்ரீவில்லிபுத்துார் கோயில் ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன. இதற்கு 'திருப்பாவை விமானம்' என்று பெயர்.

- முருகதாசன், டால்பின் இன்ஜினியரிங்., ஸ்ரீவில்லிபுத்துார்






      Dinamalar
      Follow us