/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஷப்பூச்சிகள் சூழும் அங்கன்வாடி மையம்
/
விஷப்பூச்சிகள் சூழும் அங்கன்வாடி மையம்
ADDED : மே 17, 2025 12:38 AM

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே இரண்டரை ஆண்டுகளாக விஷ ஜந்துக்கள் சூழ்வதால் சேதமடைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமுசிகாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சொக்கலிங்கபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இருபதுக்கும் அதிகமான குழந்தைகள் படித்து வரும் நிலையில் பாழடைந்து காணப்படுகிறது. இதனால் ஆறு மாதங்களுக்கு முன் வேறு வழியின்றி கிராமத்தில் தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் நிலையில் புதிய கட்டடத்திற்கான ஒதுக்கீடு இதுவரை வழங்காததால் தொடர்ந்து அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்புவதில் பெற்றோர் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இது குறித்து தவமணி, ஊர் நிர்வாகி: ஏற்கனவே நீர் ஓடை ஓட்டி உள்ள அங்கன்வாடி மையத்திற்குள் பாம்புகள் அடிக்கடி வந்ததால் இளைஞர்கள் வலை அமைத்து பாதுகாத்தோம். இருப்பினும் பழைய கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்து வந்தோம்.குழந்தைகள் நலன் வேண்டி கடந்த 6 மாதமாக தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. சத்திரப்பட்டி பகுதிகளோடு சேர்ந்து புதிய அங்கன்வாடிக்கு ஒப்புதல் வந்தும் இதை மட்டும் நிறுத்தி உள்ளனர். மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் அங்கன்வாடிக்கு கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.