/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பூசாரி நாயக்கன்பட்டியில் அங்கன்வாடி தேவை
/
பூசாரி நாயக்கன்பட்டியில் அங்கன்வாடி தேவை
ADDED : ஜூன் 02, 2025 12:23 AM
சாத்துார்: வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பூசாரி நாயக்கன்பட்டியில் அங்கன்வாடி மையம் திறக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுப்பிரமணியபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரி நாயக்கன்பட்டியில் 2500 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அங்கன்வாடி மையம் இல்லாத நிலையில் 3 கி.மீ., தொலைவில் உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்திற்கு சென்று குழந்தைகளை சேர்க்க வேண்டிய நிலை உள்ளது.
பஸ் வசதி இல்லாத நிலையில் குழந்தைகளை டூவீலரில் அழைத்துச் சென்று அங்கன்வாடி மையத்தில் இறக்கிவிட்டு மீண்டும் மாலையில் சென்று அழைத்து வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் பெற்றோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பெற்றோர் இதனால் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தப் பகுதியிலேயே அங்கன்வாடி பள்ளி மையம் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.