
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 9வது ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.
காலையில் யாக பூஜையை தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். செல்வ விநாயகர், துர்க்கை பரமேஸ்வரி அம்மன், வெள்ளியங்கிரி ஆண்டவர் சுவாமி சிறப்பு அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தது. மாலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி ரத வீதியில் உலா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.