ADDED : ஏப் 15, 2026 06:28 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: சாத்துார் அருகே நடந்த வெடி விபத்தில், மேலும் ஒருவர் இறந்ததையடுத்து, பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.
விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே கே.மடத்துப்பட்டியில், கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், நேற்று முன்தினம் காலை விபத்து ஏற்பட்டது. இதில், பாண்டி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலத்த காயத்துடன், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயில்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி, 31, என்ற தொழிலாளி நேற்று பலியானார். இதையடுத்து, பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.
வெம்பக்கோட்டை போலீசார், மடத்துப்பட்டியைச் சேர்ந்த பட்டாசு ஆலை போர் மேன் முனியசாமி, 40, என்பவரை கைது செய்தனர்.
