/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கால்நடை இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்த எதிர்பார்ப்பு மழை நேரத்தில் இறப்புகள் அதிகரிக்கும் அபாயம்
/
கால்நடை இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்த எதிர்பார்ப்பு மழை நேரத்தில் இறப்புகள் அதிகரிக்கும் அபாயம்
கால்நடை இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்த எதிர்பார்ப்பு மழை நேரத்தில் இறப்புகள் அதிகரிக்கும் அபாயம்
கால்நடை இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்த எதிர்பார்ப்பு மழை நேரத்தில் இறப்புகள் அதிகரிக்கும் அபாயம்
ADDED : அக் 28, 2024 05:04 AM
விருதுநகர் : மழை நேரத்தில் கால்நடை இறப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் தமிழக அரசு சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட கால்நடை இன்சூரன்ஸ் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள தமிழக அரசால் ஆண்டுதோறும் கால்நடைகளுக்கு மானிய திட்டத்தில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு வந்தது. இதனால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படும் போது நிவாரணமாக இழப்பீடு கிடைத்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த இன்சூரன்ஸ் திட்டம் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது மழை நேரங்களில் கால்நடைகளின் கால்கள் வீங்கி பாதிப்பது, கானை நோய் ஏற்படுவது, மேய்ச்சலின் போது சேற்றில் சிக்கி இறப்பது, விஷப்பூச்சிகள் கடித்து இறப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஊரகப்பகுதிகளில் கால்நடைகள் இறப்பது பரவலாக உள்ளது. எனவே கால்நடை இன்சூரன்ஸ் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி விவசாயி சிங்கராசு கூறுகையில், எனது மாடு சில நாட்களுக்கு முன் சேற்றில் சிக்கி இறந்தது. ரூ.பல ஆயிரத்திற்கு பசுமாட்டை விலைக்கு வாங்கி அதை நம்பி பால் வியாபரம் செய்து வந்த என்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பருவமழை நேரத்தில் ஆங்காங்கே கால்நடை இறப்பது அதிகரித்து வருகிறது. திடீரென இறந்து போன பசுமாட்டிற்கு இழப்பீடு இல்லை.
இனி வரும் காலங்களில் இது போன்ற கால்நடை இறப்பு சம்பவங்களால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க நிறுத்தப்பட்ட அரசு மானியத்துடன் கூடிய கால்நடை இன்சூரன்ஸ் திட்டத்தை விரைவில் செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

