/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடியும் நிலையில் மேல்நிலைத் தொட்டி விபத்திற்கு முன் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு

ADDED : செப் 22, 2024 03:29 AM

நரிக்குடி,: நரிக்குடி பனைக்குடியில் பள்ளி அருகே இடியும் நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என அக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நரிக்குடி பனைக்குடியில் 15 ஆண்டுகளுக்கு முன் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. நாளடைவில் பில்லர்கள் சேதம் அடைந்தன. கம்பிகள் துருப்பிடித்து வெளியில் தெரிகின்றன. இதன் அருகே பள்ளி, குடியிருப்புகள் உள்ளன. ரோடு ஒட்டி அமைந்துள்ளதால் வாகனங்கள் அடிக்கடி வந்து செல்லும். மாணவர்கள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இருக்கிறது. எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் நடமாடுகின்றனர்.
தற்போது வரை இதிலிருந்து தான் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. முழு கொள்ளளவை எட்டும் போது எடை தாங்காமல் இடிந்து விழுந்து ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. விபத்திற்கு முன் அப்புறப்படுத்த வேண்டும் என அக்கிராமத்தின் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.