/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீஸ் அவுட் போஸ்ட்டுகளை செயல்படுத்த எதிர்பார்ப்பு
/
போலீஸ் அவுட் போஸ்ட்டுகளை செயல்படுத்த எதிர்பார்ப்பு
போலீஸ் அவுட் போஸ்ட்டுகளை செயல்படுத்த எதிர்பார்ப்பு
போலீஸ் அவுட் போஸ்ட்டுகளை செயல்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : பிப் 19, 2024 05:46 AM
விருதுநகர் : விருதுநகரில் உள்ள எல்லா அவுட் போஸ்ட் போலீஸ் ஸ்டேஷன்களையும் முழுவதுமாக செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விருதுநகரில் வாகன விபத்துக்கள் நடக்கும் பகுதிகள், வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் பகுதிகளில் மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிப்பதற்காகவும், இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்காகவும் அவுட் போஸ்ட் போலீஸ் ஸ்டேஷன்கள் ஏற்படுத்தப்பட்டது. இவை முழுவதுமாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமைச்சர்கள் வருகை, மாலை நேரங்களில் வாகன சோதனையின் போது மட்டும் அவுட் போஸ்ட் போலீஸ் ஸ்டேஷன்களை திறந்து வைக்கின்றனர். மற்ற நேரங்களில் திறந்து வைத்து செயல்படுத்துவதில்லை.
இதனால் மது குடிப்பவர்கள் ஒதுங்குவதற்கு ஏற்ற இடமாக மாறியுள்ளது. இந்த இடங்களில் அமர்ந்து மது குடித்து விட்டு நடந்து செல்லுபவர்களின் தகராறில் ஈடுபடுகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் பகுதிகள் வழியாக குழந்தைகளுடன் பெண்கள் செல்வதற்கே அஞ்சுகின்றனர்.
நகர் பகுதிகளில் உள்ள சில அவுட் போஸ்ட் ஸ்டேஷன்கள் நிரந்தரமாக பூட்டியே வைக்கப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக மக்கள் கூறுகின்றனர். எனவே விருதுநகர் பகுதிகளில் உள்ள பூட்டிகிடக்கும் எல்லா அவுட் போஸ்ட் போலீஸ் ஸ்டேஷன்களையும் திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

