/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனைக்கு உதவி: ஆர்.எம்.ஓ., நியமனம்
/
அரசு மருத்துவமனைக்கு உதவி: ஆர்.எம்.ஓ., நியமனம்
ADDED : அக் 29, 2025 09:31 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு முதல் ஆர்.எம்.ஓ., உதவி ஆர்.எம்.ஓ., ஆகிய இரு பதவிகளும் காலியாக இருந்தது. உதவி ஆர்.எம்.ஓ., ஆக வந்த ஸ்ரீதரன், திருச்சி ஆர்.எம்.ஓ., ஆக பதவி உயர்வு பெற்று சென்றார்.இதையடுத்து காலியாக இருந்த ஆர்.எம்.ஓ., உதவி ஆர்.எம்.ஓ., ஆகிய பணியிடங்களுக்கு மாதம் ஒரு பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதனால் மருத்துவமனையின் பணிகள் பாதிக்கப்பட்டது. இது குறித்து செப். 25ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக அரசு மகப்பேறு மருத்துவமனை டாக்டர் வைஷ்ணவி தற்போது உதவி ஆர்எம்.ஓ., ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது ஆர்.எம்.ஓ., பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

