ADDED : ஜன 24, 2025 04:10 AM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் ரம்யா , ஸ்ரீநிதி ஆகியோர், மதுரையில் நடந்த தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் வினாடி -வினா போட்டியில் பங்கேற்று ஆறாம் இடத்தை பிடித்து விருதுகள், சான்றிதழ்கள், பரிசுகள் பெற்றனர்.
சாதனை மாணவிகளை பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள், தாளாளர் விஜயகுமார், செயலாளர் டாக்டர் பால்சாமி, முதல்வர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினார்.
